ஏர்டெல் இன்டர்நெட் விலை கிடுகிடு உயர்வு! ஒரு ஜிபி இவ்வளவா?

27 August 2020 தொழில்நுட்பம்
airtel.jpg

தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் மீண்டும் இன்டர்நெட் விலையினைக் கூட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டாவினை 100 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் வெறும் 100 ரூபாய்க்கு ஒரு ஜிபி கொடுக்க வேண்டும் எனவும், அது சாத்தியமான ஒன்று தான் எனவும் கூறியுள்ளார்.

தற்பொழுது 160 ரூபாய்க்கு 16 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகின்றது. இது 1.6ஜிபி ஆக குறைக்கப்பட வேண்டும் என்றுக் கூறியுள்ளார். திரைப்படங்கள், பொழுதுபோக்கு உள்ளிட்டவைகளுக்கு ஏற்றாற் போல, இன்டர்நெட் டேட்டா பேக்கினை பயனர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றுக் கூறியுள்ளார். தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் 24 நாட்களுக்கு, தினமும் ஒரு ஜிபி டேட்டாவினை வழங்கி வருகின்றது. இவர் கூறுவது போல் திட்டம் வந்தால், 24 நாட்களுக்கு மொத்தமே, 2.4 ஜிபி தான் கிடைக்கும்.

ஜியோ நிறுவனம் இந்தியாவில் உருவானது முதல், பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளன. ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக டேட்டா, இலவச தொலைத்தொடர்பு சேவை என, பல வசதிகளை அள்ளிக் கொடுத்தக் காரணத்தால், அதற்குப் போட்டியாகவும், அதன் போட்டியினை சமாளிக்கவும் பிற நிறுவனங்களும் இலவசங்களையும், சலுகைகளையும் அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

இந்தக் காரணத்தால், ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS