இந்தியாவின் மிகப் பெரியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகியவை இந்தியத் தொலைத் தொடர்புத் துறைக்கு சுமார் 4500 கோடி ரூபாயை கட்டியுள்ளன.
ஸ்பெக்ரம் ஒதுக்கிட்டிற்குப் பின், ஒரு சில நிறுவனங்கள் கட்ட வேண்டியப் பாக்கித் தொகையினை, தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம். அப்படி செலுத்தி, தாங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை கழித்துக் கொள்ளலாம். இந்நிலையில், இந்த மூன்று நிறுவனங்களும் உடனடியாக தங்களுடையப் பாக்கித் தொகையினை கட்டுமாறு, தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, ஜியோ நிறுவனம் சுமார் 1133 கோடி ரூபாயும், வோடாபோன் நிறுவனம் 2421 கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனம் 977 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளன.
இது குறித்து, வோடாபோன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது சாதாரணமாக தொலைத்தொடர்புத் துறையில் நடக்கும் விஷயம் தான். இதனைப் பெரிதாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்றுக் கூறியுள்ளார்.
economictimes.indiatimes.com/industry/telecom/telecom-news/jio-vodafone-idea-airtel-pay-government-over-rs-4500-crore-in-spectrum-dues/articleshow/71707398.cms