தற்பொழுது ரீசார்ஜ் செய்யும் வசதியுடன், இன்சூரன்ஸ் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தி உள்ளது ஏர்டெல் நிறுவனம்.
இந்த புதியத் திட்டத்திற்காக, பாரதி ஏஎக்ஸ்ஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன், ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் திட்டமானது 18 வயது முதல் 54 வயது உள்ளவர்களுக்கு மட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இன்சூரன்ஸ் திட்டமானது, 4 லட்சம் வரை வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்திற்கு எவ்வித ஒப்பந்தமோ அல்லது மருத்துவ பரிசோதனையோ தேவையில்லை. இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதற்கான சான்றிதழ் உடனடியாக, டிஜிட்டல் வடிவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த இன்சுரன்ஸ் திட்டமானது, ரூபாய் 599 ரீசார்ஜ் செய்யும் பொழுது வழங்கப்பட உள்ளது. 599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது, தினமும் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு நூறு எஸ்எம்எஸ், இலவச போன் கால் வசதி என சலுகைகள் வழங்கப்படுகின்றது. அத்துடன் இந்த இன்சூரன்ஸ் சேவையும் வழங்கப்படுகின்றது. மேலும், இது 84 நாட்கள் வாலிடிட்டு உடையது எனவும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் 599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது, உங்களுடைய இன்சூரன்ஸ் திட்டமும் ரீனீவல் செய்யப்படுகின்றது. இந்த வசதி தற்பொழுது, டெல்லி, தமிழ்நாடு புதுச்சேரி வழங்கப்பட்டு வருகின்றது. இது விரைவில், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே போல், 249 ரூபாய்க்கும் ரீசார்ஜ் திட்டம் அமலில் உள்ளது. அத்துடன் இன்சுரன்ஸ் வசதியும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக, ஹெச்டிஎப்சி நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 249 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திற்கு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, இலவச போன் கால் வசதி என மொத்தம் 28 நாளைக்கு வழங்குகின்றது ஏர்டெல் நிறுவனம்.