ஏர்டெல் செட் டாப் பாக்ஸ் விலை அதிரடி குறைப்பு!

13 October 2019 அரசியல்
airtel.jpg

ஜியோ நிறுவனத்தின் எழுச்சிக்கு பிறகு, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், பல சலுகைகளை அள்ளித் தந்து கொண்டு இருக்கின்றது.

அந்த வரிசையில், தற்பொழுது தன்னுடைய டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் ஆகியவைகளிலும் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பினை அடுத்து, அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஏர்டெல் எதிர்ப்பார்க்கின்றது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் ஹெச்டி செட் டாப் பாக்ஸின் விலை, 1800 ரூபாயில் இருந்து, 1300 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், எஸ்டி செட் டாப் பாக்ஸின் விலை 1,100 ரூபாய்க்கு விற்க்கப்படுகின்றது. இந்த சலுகைகள் டிடிஹெச் சேவைகளுக்கு வழங்கப்படவில்லை. தனியாக டிடிஹெச் வசதியினைப் பெற்றதும், இந்த செட் டாப் பாக்ஸ்களை இந்த விலையில் வாங்க இயலும்.

கடந்த ஜூலை மாதம் டாடா ஸ்கை நிறுவனம், செட் டாப் பாக்ஸ் விலையைக் குறைத்தது. ஆனால், ரீசார்ஜ் விலையை இன்னும் குறைக்காததால், வாடிக்கையாளர்கள், அதனையும் குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

HOT NEWS