சீனாவில் விமான சேவை, புல்லட் ரயில் சேவை தொடக்கம்! மக்கள் கண்ணீர்!

09 April 2020 அரசியல்
hongkongrailways.jpg

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், ஊஹான் பகுதியில் இருந்து பரவ ஆரம்பித்தது கொரோனா வைரஸ். அப்பொழுது முதல், பதினைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால், ஊஹான் மாகாணத்தினை சீல் செய்த போலீசாரும், இராணுவத்தினரும் பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதித்தனர். மேலும், அந்த மாகாணத்துடன் தொடர்புடைய விமனா சேவை மற்றும் இரயில் சேவையினை முற்றிலுமாகத் துண்டித்தது சீன அரசாங்கம்.

இவ்வாறு செய்வதன் மூலம், இந்த வைரஸானது மேலும் பரவாமல் இருக்கும் என்றுக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது சீனாவின் ஊஹான் பகுதியில் இந்த வைரஸால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றத் தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது கணிசமாகக் குறைந்து விட்டது.

இதைத் தொடர்ந்து, 76 நாட்களாக தடை செய்து வைத்திருந்த விமான சேவையையும், இரயில் சேவையையும் சீன அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளனர். ஒவ்வொரு வாரம் ஒன்றேகால் கோடி பேர், இந்த ஹூபேய் மாகணத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், விமான நிலையத்திற்கு வந்த விமானத்தினை, சீன விமான நிலையம், நீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்தது.

HOT NEWS