திவாலாகும் நிலையில் விமானத்துறை! நிதியமைச்சருக்கு கடிதம்!

04 April 2020 அரசியல்
indianairport.jpg

இந்திய விமானத் துறையானது, திவாலாகும் நிலையில் உள்ளதாக, கூறப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய வர்த்தக தொழில் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் ஸ்டான்லி, நிதியமைச்சருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

கடந்த மாதம் தொடங்கி, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை சுமார் 21 நாட்களுக்கு இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவானது, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளும் கடுமையாக முடங்கி உள்ளன. குறிப்பாக, போக்குவரத்துத் துறை, கப்பல்துறை மற்றும் விமானத்துறையின் எதிர்காலமானது கேள்விக்குறியாகி உள்ளது.

இருப்பதிலேயே, விமானத் துறையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்க, மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தற்பொழுது வரை புக்காகி உள்ள சுமார் 2 லட்சத்து 59 ஆயிரம் கோடி மதிப்பிலான டிக்கெட்டுகளுக்கான பணமானது, திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.

இது குறித்து, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கூறுகையில், கையிருப்பில் இருந்து 4 லட்சத்து 51 ஆயிரத்து 400 கோடி ரூபாயானது, செலவாகி இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியாவின் பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் திண்டாடி வருகின்றனர். தற்பொழுது, இந்த ஊரடங்கு உத்தரவால், தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற ஊழியர்களை நீக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS