இதனால தான் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவு அளித்தாரா?

26 November 2019 அரசியல்
ajitpawar.jpg

சிவசேனாவிற்கு ஆதரவு என, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக முடிவு செய்திருந்தன. இந்நிலையில், திடீரென்று, பாஜக ஆட்சியமைக்க, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரவைத் தலைவர் அஜித்பவார் ஆதரவு அளித்தார். அவர் கூறுகையில், பாஜக ஆட்சியமைக்க, தேசியவாத காங்கிரஸ் முழு ஆதரவு வழங்குவதாக தெரவித்தார்.

இனையடுத்து, அவருடையக் கடிதத்தினை ஏற்றுக் கொண்ட ஆளுநர், பாஜக ஆட்சியமைக்க உத்தரவிட்டார். பாஜகவின் சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அஜித் பவாரும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தற்பொழுது, அஜித் பவார் மீதான ஒன்பது வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியின் பொழுது, அஜித் பவார் மீதான நீர் பாசன ஊழலை, தேர்தலின் பொழுது அதிகமாக பேசியது பாஜக.

மொத்தம் 70,000 கோடிக்கு மேல் இவர் ஊழல் செய்திருப்பதாக கருதி, சுமார் 3,000 பேரிடம் விசாரணையும் நடைபெற்று உள்ளது. ஆனால், பாஜகவிற்கு ஆதரவளித்ததை அடுத்து, அஜித் பவார் மீதான ஒன்பது வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தற்பொழுது, காங்கிரஸ் தரப்பினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

HOT NEWS