விவசாயிகளுக்காகவே கூட்டணி! அஜித் பவார் பேட்டி!

24 November 2019 அரசியல்
ajitpawar.jpg

விவசாயிகளுக்காகவும் மற்றும் மஹாராஷ்டிரா நலனுக்காகவுமே நான், பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என, அஜித் பவார் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலையில், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒருமனதாக ஆதரவு அளித்தனர். இந்நிலையில், நேற்று காலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரவைத் தலைவர் அஜித் பவார், பாஜகவிற்கு ஆதரவு அளித்தார். இதன் காரணமாக, பாஜக ஆட்சி அமைத்தது.

பலரும் பலவிதமாக கூறி வந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அஜித் பவார், மஹாராஷ்டிராவின் விவசாயிகள் மற்றும் மஹாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகவே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது எனக் கூறினார்.

தற்பொழுது வரும் 30ம் தேதிக்குள், தங்களுடையப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோசியாரி கெடு விதித்துள்ளார். மொத்தமாக பாஜக ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்பொழுது பாஜகவில் 105 எம்எல்ஏக்களே உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 54 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 54 பேர் தவிர்த்து, சுயேட்சை எம்எல்ஏக்கள் 13 பேரும், சிறிய கட்சிகளைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

பாஜகவிற்கு, தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை என, அக்கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்றுத் தெரிவித்தார். மேலும், தன்னுடைய கட்சியில் இருந்து, அஜித்பவாரினை நீக்கியும் உத்தரவிட்டுள்ளார். ஒரு வேளை, பாஜக தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், சிவசேனா ஆட்சியமைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், ஆட்சியமைக்க உதவிய அஜித் பவார், தன் கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இன்று காலையில், மும்பையில் உள்ள சரத் பவாரின் வீட்டிற்கு, பாஜக கட்சியின் எம்பி சஞ்சய் காடே பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார்.

HOT NEWS