மதுரை அஜித் ரசிகர்கள் அதிரடி! பிளக்ஸ் கிடையாது! குவியும் பாராட்டுக்கள்!

15 September 2019 சினிமா
ajithfansposter.jpg

ஏற்கனவே, விஸ்வாசம் படத்திற்கு பிளக்ஸ் மற்றும் கட் அவுட் வைக்கும் பொழுது, அஜித் ரசிகர்கள் நின்று கொண்டிருந்த கட் அவுட் சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். இதற்குப் பின்ன்னும், தொடர்ந்து, அஜித் குமாருக்கு பிளக்ஸ்கள், கட் அவுட்கள் மற்றும் பேனர்களை அவருடைய ரசிகர்கள் வைத்து, தன்னுடைய ஆதரவினை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்பொழுது சென்னையில் நடைபெற்ற விபத்திற்குப் பின், விஜய் உட்பட பல நட்சத்திரங்களும் பிளக்ஸ் வைக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஜித் இது குறித்து, எவ்வித அறிக்கையோ அல்லது அறிவிப்போ வெளியிடவில்லை. ஆனால், அவருடைய ரசிகர்கள் இனி அஜித் படங்களுக்கு, அவர் புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும், பொது இடங்களில் பேனர் வைக்கமாட்டோம் என உறுதிமொழி ஏற்கின்றோம் என்று, மதுரையில் அவருடைய ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

இதனைப் பல அஜித் ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். ஒரு வேளை பிளக்ஸ் வைக்கிறத விட்டுட்டு, வேறு வழியக் கண்டுபிடிச்சுட்டாங்களோ?

HOT NEWS