அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையில் ஏற்கனவே ஒரு முறை இல்லை, பல முறைப் பிரச்சனை ஏற்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து, அம்மணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின், ஆள் அமைதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், தற்பொழுது அவர் மீண்டும் சமூக வலைதளங்களில் பிஸியாகிவிட்டார். இதனால், மீண்டும் அவருடன் பிரச்சனையில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அஜித் ரசிகர் ஒருவர், தன்னுடைய டிவிட்டர் கணக்கின் மூலம், கஸ்தூரியை ஆபாசமாக விமர்சித்து இருக்கின்றார்.
இதற்குப் பதிலடி கொடுத்து வரும் கஸ்தூரி, அந்த அஜித் ரசிகரைப் பற்றி அஜித் ரசிகர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றுள்ளார். மேலும், இது பற்றி அஜித் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னுடைய டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இது ரசிகர்கள் சண்டை இல்லை எனவும், இது பாலியல் தாக்குதல் எனவும் அவர் கூறியுள்ளார். இது தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவருடையப் பதிவிற்கு பதிலளித்து வரும் தல அஜித்தின் ரசிகர்கள், சர்ச்சைக்குரிய வகையில் பெண்களை விமர்ச்சிப்பவர்கள், அஜித் ரசிகர்கள் அல்ல எனக் கூறியுள்ளனர்.