நடிகர் அஜித்குமார் தற்பொழுது, வலிமை படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அதில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தினை போனீகபூர் தயாரித்து வருகின்றார். இதனையும், நேர்கொண்ட பார்வைத் திரைப்படத்தினை இயக்கிய, ஹெச்.வினோத் தான் இயக்கி வருகின்றார். இந்தப் படத்தின் சூட்டிங்கானது, சென்னையில் நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தின் சூட்டிங்கில், அஜித்குமார் தற்பொழுது நடித்து வருகின்றார்.
இதில், அஜித்குமார் பைக் ஓட்டும் காட்சியானது எடுக்கப்பட்டு வருகின்றது. அதில், அஜித்குமார் பைக் ஓட்டும் பொழுது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாகவும் அதில், அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால், சிறிது நேரம் தடைபட்ட சூட்டிங்கானது, மீண்டும் தொடங்கியது எனவும், அதில் அஜித் நடித்தார் எனவும் சமூக வலைதளங்களில், செய்தி பரவி வருகின்றது.