வலிமை படத்தில் அஜித் பெயர் இது தான்! கொண்டாடும் ரசிகர்கள்!

05 November 2020 சினிமா
ajithkumarvivegam.jpg

தல அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் சூட்டிங்கானது, ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகின்றது.

அஜித்குமார் நடிப்பில், போனிகபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்தில், அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் சூட்டிங்கானது, ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவலால், ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, படத்தின் சூட்டிங்கும் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், படத்தின் சூட்டிங் பணிகளும் தொடங்கி உள்ளன. படத்தினை, ஐதராபாத் நகரில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தான் தற்பொழுது படமாக்கி வருகின்றன. இந்தப் படப்பிடிப்பில், அஜித்குமார் கலந்து கொண்டாரா என்றத் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்த சூழ்நிலையில், இந்தப் படத்தில் அஜித்குமாருக்கு ஈஸ்வரமூர்த்தி என்றப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதனை தற்பொழுது சமூக வலைதளங்களில், அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS