மங்காத்தா ஹிட் ஆனதும் ஆனது, தல அஜித் தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலிலேயே வர ஆரம்பித்துவிட்டார். படத்தின் ஒரு சிலக் காட்சிகளுக்காக, கருப்பு நிற ஹேர்ஸ்டைலில் வந்தாலும், பெரும்பாலும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலையே பயன்படுத்தி வந்தார்.
இதனை கிண்டல் செய்யாத நபர்களும் இல்லை. இருப்பினும் இதனை தல அஜித் குமார் கண்டு கொள்வதில்லை. ஆனால், படங்கள் எப்படியோ ஹிட்டாகி விடுகின்றன. அந்த அளவிற்கு அவர் ரசிகர்களை சேர்த்து வைத்து இருக்கிறார். இந்நிலையில், தற்பொழுது அஜித் குமார் மீண்டும், பழைய அழகிய லுக்கில் திரையில் தோன்ற உள்ளார்.
ஆம், தல 60 திரைப்படத்தில், மிக அழகான இளைஞனாகத் தோன்ற உள்ளார். அப்படத்திற்காக தீவிர உடல்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவருடைய லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியானது. அதில் நீச்சல் வீரர் குற்றாளீஸ்வரனுடன், தல அஜித்குமார் இருக்கின்றார். தலையில், கருப்பு முடியுடன், உடல் எடையையும் குறைத்துக் கச்சிதமாக இருக்கின்றார்.
தல 60 திரைப்படத்தில் அஜித்குமார் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என, ஒரு சிலர் கூறுகின்றனர். இல்லை, அஜித் குமார் பைக் ரேஸராக நடிக்க உள்ளார் என ஒரு சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ, அஜித் குமாரை அழகாக காட்டினால் நமக்குக் கொண்டாட்டம் தானே!