சமூக வலைதளமான பேஸ்புக்கில், அஜித்குமார் என்ற அறிவிப்பு வெளியானதால், அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
நேற்று மாலையில், அஜித்குமார் என்ற பெயரில், சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வைரலாகி வந்தது. அதில், என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில், இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்குப் பின் என்ன நடந்தது எனக் கூற வேண்டுமா என்ன? அனைத்து அஜித் ரசிகர்களும் அந்தக் கணக்கினைப் பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். இந்த விஷயம் அஜித்குமாருக்கு, சென்றுவிட்டது. அவ்வளவு தான். அதிரடியாக, ஒரு அறிக்கை வெளியாகிவிட்டது. அதில், அந்த கணக்குப பொய்யான ஒன்று. எவ்வித சமூக வலைதளங்களிலும் அஜித்குமார் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அஜித்குமாரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எவ்வித சமூக வலைதளங்களிலும் அஜித்குமார் இல்லை.