4,000 கிலோமீட்டர் பைக் டிரிப்! அஜித் சாகச பயணம்! கொண்டாடும் ரசிகர்கள்!

17 January 2021 சினிமா
ajithvalimaifan.jpg

தல அஜித்குமார் சென்னை முதல் சிக்கிம் வரை, சுமார் 4,000 கிலோ மீட்டர் பைக்கிலேயே பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஆகியவைகளில் விருப்பம் உள்ளவராக, தல அஜித்குமார் இருந்து வருகின்றார். பலமுறை தன்னுடைய பிஎம்டபிள்யூ பைக்கில், நீண்ட தூரம் பயணம் செய்வதை அஜித்குமார் வழக்கமாகக் கொண்டு உள்ளார். ஏற்கனவே ஒரு முறை, இது போன்ற பயணத்தினை அஜித்குமார் செய்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராத வகையில், யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், உடை அணிந்து கொண்டு இவ்வாறான பயணங்களில் அவர் ஈடுபடுகின்றார்.

அப்படி ஒரு பயணத்தினை, தற்பொழுதும் அவர் செய்துள்ளதாக, சினிமா வட்டாரகள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து கிளம்பி சிக்கிம் வரை சென்று, பின்னர் மீண்டும் சென்னைக்கு அவர் திரும்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 4000 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த பயணத்தினை அவர் வெற்றிகரமாகச் செய்துள்ளார் எனவும், விரைவில் வலிமைப் படத்தின் கடைசிக் கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியுடன், அஜித்குமாரின் பயணச் செய்தியும் ஒரே நேரத்தில் வெளியாகி வருவதால், அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

HOT NEWS