தற்பொழுது தல அஜித்குமார் ஹைதராபாத் நகரில் உள்ள ஸ்டுடியோவில், வலிமை பட சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
தல அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்தப் படமானது, ஒரு வருடமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தின் சூட்டிங்கானது ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படமானது கொரோனா வைரஸ் காரணமாக எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
தற்பொழுது தமிழக அரசு சூட்டிங் செல்ல அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் சூட்டிங்கானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தின் பலக் காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட வேண்டியிருந்த சூழலில், கொரோனா அச்சம் காரணமாக, ஹைதராபாத் நகரில் உள்ள ரமோஜிராவ் ஸ்டுடியோவில் செட் அமைத்து சூட்டிங் செய்து வருகின்றனர்.
அங்கு பைக் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்பொழுது எதிர்பாராத விதமாக, அஜித்குமாருக்கு விபத்து ஏற்பட்டது. உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. இதனால் சூட்டிங்கானது பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து காயத்துடன் தல அஜித்குமார் நடித்து வந்தார். இந்நிலையில், தற்பொழுது அவர் சென்னைக்கு சிகிச்சைக்காக திரும்பியுள்ளார்.
அவர் இல்லாதப் படக் காட்சிகள் அனைத்தும், தற்பொழுது படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படமானது, எப்பொழுதும் இல்லாத வகையில் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக, படத்தின் எடிட்டர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்த சூழலில், அஜித்குமார் இந்த வார இறுதியில், படத்தின் சூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது. இந்தப் படமானது, அஜித்தின் பிறந்த நாளான வருகின்ற மே 1ம் தேதி அன்று ரிலீசாகும் விதத்தில் தயராகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.