பப்ஜிக்கு பதில் அக்சய் குமார் கூறிய புதிய கேம்! அதுவும் காப்பியாம்ல!

04 September 2020 விளையாட்டு
fau-g.jpg

பப்ஜிக்கு பதிலாக, அக்சய் குமார் கூறிய புதிய கேமின் போஸ்டர் கூட, கனடா நாட்டு கேமின் காப்பி என, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், தொடர்ந்து மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், சீனாவினைச் சேர்ந்த பல செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. டிக்டாக், பப்ஜி உள்ளிட்டவைகள் இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவைகளுக்கு இந்திய அரசு தடை விதித்து உள்ளது. இதனால், இதற்கு மாற்றாக என்ன ஆப் உள்ளது என, பயனர்கள் தேடி வருகின்றனர்.

fau-g.jpg

இந்நிலையில், நடிகர் அக்சய் குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றினை வெளியிட்டார். அதில், Fearless and United Guards (FAU-G) என்றப் பெயரில் கேம் தயாராகி வருவதாக கூறியுள்ளார். அதற்கு இந்தியர்கள், தங்களுடைய ஆதரவினை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனைப் பற்றி, ஆய்வு செய்த நெட்டிசன்கள் தற்பொழுது அக்சய் குமாரை கலாய்த்து வருகின்றனர்.

அவர் வெளியிட்ட போஸ்டரில் இருப்பது, கனடா நாட்டினைச் சேர்ந்த கேம் ஒன்றின் புகைப்படம் எனவும், அதனைக் காப்பியடித்து புதிய போஸ்டரினை இவர்கள் மேட் இன் இந்தியா என வெளியிட்டு உள்ளனர் எனவும் கிண்டல் செய்து வருகின்றனர். நான் ஒரு கனடா நாட்டுப் பிரஜை என, அக்சய் குமார் ஏற்கனவே கனடா நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS