பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமாருக்கு, 2.0 படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு மனிதரின் காட்டில் பணமழைப் பொலிந்து வருகின்றது.
ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில், தற்பொழுது தனுஷ் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில், பாலிவுட்டினைச் சேர்ந்த அக்சய் குமார், சாரா அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் ஒப்பந்தமாகி உள்ளனர்.
இந்தப் படத்தில், இன்னும் பல நட்சத்திரங்கள் இணையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், அவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது ராகவா லாரன்ஸ் இயக்கும், லெக்ஷ்மி பாம் திரைப்படத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகின்றார்.
இந்தப் படத்தினை அடுத்து, தனுஷ் படத்தில் நடிக்கும் அக்ஷய் குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளது. தனக்கு 120 கோடி கொடுத்தால் தான், இந்தப் படத்தில் நடிப்பேன் என, அக்ஷ்ய் குமார் கூறியதாகவும், அதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக, 120 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக தற்பொழுது அக்ஷய் குமார் உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.