ஹிந்தி படங்களிலேயே, அதிக அளவில் வசூல் மழையில் நனைந்த பட வரிசை என்றால், அது தூம் பட வரிசைகள் தான். வசூல் செய்வதற்கென்ற, உருவாக்கப்பட்ட படங்களாகவே இவை வருகின்றன. அந்த அளவிற்கு, இவை, வசூலில் சாதித்துள்ளன.
இதுவரை, மூன்று பாகங்கள் வெளியாகி உள்ளன. முதல் பாகத்தில் ஜான் ஆப்ரகாம் நாயகனாகவும், இரண்டாவது பாகத்தில் ஹிருதிக் ரோஷன் நாயகனாகவும் நடித்தார். மூன்றாவது பாகத்தில், அமீர் கான் நாயகனாக நடித்தார். இந்த மூன்று பாகங்களும், பாக்ஸ் ஆபிசில், சக்கைப் போடு போட்டன.
இதனை முன்னிட்டு, அடுத்த நான்காவது பாகத்தினை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பாகத்தில், தற்பொழுது நல்ல வசூலினைக் குவிக்கும் நடிகரை நடிக்க வைக்க, அப்படத்தினை தயாரிக்கும் யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அக்சய் குமாரின் பெயர் தற்பொழுது அடிபட்டு வருகின்றது. இந்தப் படத்தில் அவர் நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இந்தப் படத்தில் அவர் நடித்தால், அவரை துரத்தும் போலீஸ் கதாப்பாத்திரத்தில், அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்பாரா ஆகியோர் நடிப்பார்கள். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.