அழகர் கோவில் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி! அரசிற்கு சொந்தமானது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

06 November 2019 அரசியல்
alagar.jpg

கடந்த 2014ம் ஆண்டு, அழகர் கோவில் மலையானது, கோவிலுக்குச் சொந்தம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை ரத்து செய்து, அழகர் கோவில் மலை அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றும், மேலும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அழகர் கோவில், வைணவ தேசங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இங்குள்ள பதினெட்டாம் படி கருப்பசாமி, தென் தமிழக மக்களால் வணங்கப்பட்டு வருகின்றார். இங்குள்ள அழகர் மதுரையில் எழுந்தருளும் திருவிழாவானது, உலகப் பிரசித்திப் பெற்றது.

இந்த அழகர் கோவிலானது, ரிஷபாத்திரி என்று அழைக்கப்படும் அழகர் மலையின் அடியில் அமைந்துள்ளது. மொத்தம் ஏழு மலைகளால் ஆன அழகர் மலையானது, அழகர் கோவிலுக்கே சொந்தம் என, கடந்த 2014ம் ஆண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து, வனத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அழகர் மலை, வனைத்துறையினருக்கு சொந்தமானது எனவும், இந்த மலையும், மலையில் உள்ள காடுகளும் பாதுகாகப்பட்ட பகுதி எனவும் கூறியுள்ளது. மேலும், அங்கு மரம் வெட்டக் கூடாது எனவும் கூறியுள்ளது.

HOT NEWS