கேரளாவில் இருந்து வந்த கோழிகள், முட்டைகள் திருப்பிவிடப்பட்டன!

11 March 2020 அரசியல்
eggsoriginal.jpg

கேரளாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கிருந்து வந்த கோழிகள் மற்றும் கோழி முட்டைகளை, தமிழகத்தின் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வாத்துக் குஞ்சுகள், கோழிகள் மற்றும் முட்டைகள் முதலியவை பற்றி, தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில், கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட அவைகள் அனைத்தையும், மீண்டும் அங்கேயே அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து, தகவலளிக்க கட்டுப்பாட்டு அறையையும், 0422-2397614 என்ற எண்ணையும் உருவாக்கி உள்ளது. இந்த எண்ணினைத் தொடர்பு கொண்டு, உரிய விளக்கமளிக்கலாம் எனவும், சந்தேகப்படும் நபர்கள் தொடர்பு கொண்டு பேசலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

HOT NEWS