பீகாரில் 1 டூ 11 வரை எல்லாரும் பாஸ்!

09 April 2020 அரசியல்
indianstudent.jpg

பீகாரில் பள்ளியில் படித்து வருகின்ற ஒன்று முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் செய்யப்பட்டுள்ளதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.

பீகாரில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் ஒன்று முதல் 11ம் வகுப்பு வரை, எவ்விதத் தேர்வும் இல்லாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், பத்து மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு, ஊரடங்கு நீக்கப்பட்ட பின், தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு முதல், அந்த மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் குளிரால் தேர்வு தள்ளி வைப்பு, ஆசிரியர்கள் போராட்டம் என, நடப்புக் கல்வியாண்டானது பாதிக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிக்கு மாணவர்கள் வர அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில், கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால், தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் இருப்பதைக் கருத்தில், கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஊதியம் கேட்டுப் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்காக 802.74 கோடி ரூபாயினையும் ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், தேர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS