முன்னாள் காதலர் மீது அமலா பால் புகார்! இதற்கு தானா?

05 November 2020 சினிமா
amalapual12.jpg

நடிகை அமலா பால், தன்னுடைய ஆண் நண்பர் பவீந்தர் சிங் மீது வழக்கு தொடர, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கும்கி, விஐபி, ராட்சசன், தலைவா உள்ளிட்ட முன்னணிப் படங்களில் நடித்தவர் அமலா பால். அவருக்கும், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற 3 ஆண்டுகளில் இருவருக்கும் இடையில், மனஸ்தாபம் ஏற்பட்டது. இருவரும் 2017ம் ஆண்டு பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை, 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அமலாபால் எவ்வித விஷயத்திலும் கலந்து கொள்ளவே இல்லை. படங்களில் நடித்து வருகின்ற அவர், தன்னுடைய ஆண் நண்பரும், பிரபல பாடகருமான பவீந்தர் சிங்குடன் இணைந்து உல்லாசமாக சுற்றி வந்தார். அவரும் பவீந்தர் சிங்கும் இணைந்து, நெருக்கமானப் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் 20ம் தேதி அன்று பவீந்தர் சிங், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில புகைப்படங்களை வெளியிட்டார்.

அதில், அமலாபாலும், பவீந்தர் சிங்கும் மனக் கோலத்தில் இருந்தனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில், சில மணி நேரங்களில் பவீந்தர் சிங், அந்தப் புகைப்படத்தினை நீக்கவிட்டார். இது குறித்து விளக்கமளித்த அமலாபால் தரப்பு, அமலா பாலுக்கு 2வது திருமணம் என கூறப்படுவது பொய். அப்படி ஒன்று நடைபெறவே இல்லை என்றுத் தெரிவித்தது. இதனிடையே, இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் பவீந்தர் சிங் என்னுடைய அனுமதி இன்றி, இந்தப் புகைப்படங்களை எனக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக வெளியிட்டு உள்ளார் எனக் கூறியுள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம், பவீந்தர் சிங் மீது வழக்கு தொடர, அனுமதி வழங்கியுள்ளது.

HOT NEWS