அமேசானின் அலெக்சாவினை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள்! நிமிடத்திற்கு ஒரு I love You!

10 February 2020 தொழில்நுட்பம்
amazonalexa.jpg

உலகிலேயே அதிகளவில் இணையத்தினைப் பயன்படுத்தும் நாடுகளுள், அதிவிரைவாக இந்தியா முதலிடத்தினைப் பிடித்துவிடும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தொழில்நுட்பத்தினை இந்தியர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்துவதாகவும் ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.

நமக்குத் தேவையான வசதிகளை, தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம், வழங்குகின்றது அலெக்சா. இந்த அலெக்சாவினைப் பயன்படுத்தி, இணையத்தினை எளிதாகக் கையாள இயலும். இதனை அமேசான் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கருவியானது, மிக விரைவாக, அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்து விட்டது என்றுக் கூறலாம்.

அந்த அளவிற்கு, இதனை மக்கள் விரும்பி பயன்படுத்துகின்றனர். இதனைப் பற்றிய சுவாரஸ்யமான புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், ஒவ்வொரு நிமிடமும், ஒரு ஐ லவ் யூ என்று இந்தியர் கூறுகின்றாராம். மேலும், இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை அலெக்சா வில் யூ மேரி மீ எனவும் கேட்கின்றனராம்.

ஒரு நிமிடத்திற்கு எட்டு முறை, ஹவ் ஆர் யூ என கேட்கின்றனராம் இந்தியர்கள். நிமிடத்திற்கு மூன்று முறை, அலெக்சா கைசீ கோ? என ஹிந்தியில் கேட்கின்றனராம். ஒரு நிமிடத்திற்கு, ஆயிரம் பாடல்களை, இந்தியர்கள் அலெக்சாவிடம் ஒளிபரப்பக் கூறுகின்றனராம்.

இவ்வளவு வெறித்தனமாக, இந்த அலெக்சாவினை இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என, அந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இதனால், இந்தியாவில் அலெக்சாவின் பயன்பாட்டினை அதிகரிக்க, அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

HOT NEWS