உலகின் ஆக்சிஜன் டேங்க் என வர்ணிக்கப்படும், பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ஆயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.
இது பிரேசில் நகர மக்களை மட்டுமின்றி, இயற்கை ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்தை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது. அதன் படி, இந்த ஆண்டு மட்டும், சுமார் 72,843 முறை தீப்பிடித்து அணைந்துள்ளது அமேசான். ஆனால், தற்பொழுது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயாணது அணையாது போலிருக்கிறது. இந்தத் தீயானது 20 நாட்களாக எரிவதாக அந்த காட்டின் அருகில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இதனை அணைக்க முடியாமல், அந்நாட்டு அரசாங்கம் திணறி வருகிறது.
வானில் பறக்கும் விமானங்களில் இருந்து, கண்ணாடி பாட்டில்களை தூக்கி வீசிவிடுகின்றனர். அவ்வாறு தூக்கி வீசப்படும் அந்தக் கண்ணாடி பாட்டில்கள் குவி லென்சைப் போல் செயல்பட்டு, காய்ந்த இலைகளை எரிக்கின்றன. அது காடு முழுவதும் மளமளவெனப் பரவி காட்டுத் தீயாகிவிடுகின்றது. இதனை நம்முடைய சுய ஒழுக்கத்தின் மூலமே தவிர்க்க இயலும்.
உலகின் ஆக்சிஜன் தேவையில் 20% ஆக்சிஜனை இந்த அமேசான் காடுகள் வழங்கி வருகின்றன. இத்தகைய தீ விபத்தின் காரணமாக, வானிலையில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். மேலும், இந்தத் தீ விபத்தால் ஏற்ப்பட்ட புகையானது, அந்தக் காட்டில் இருந்து சுமார் 1,700 மைல்களுக்கு அப்பால் உள்ள, சா பவுலோ நகர் வரைப் பரவியுள்ளது என்றால், அங்கு தீயின் நிலையைப் பற்றி நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.