அமேசான் வலைதளத்தில் பிரைம் டே அன்று நடைபெற்ற விற்பனையின் காரணமாக, 209 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள் என, அமேசான் அறிவித்து உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று, இந்த அமேசான் பிரைம் டே சேல் முடிந்தது. அந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 91,000 சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கான விற்பனையானது நடைபெற்றது. அதில், 4000 சிறு விற்பனையாளர்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான விற்பனையினை அடைந்துள்ளனர். அதே போல், 209 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என, அமேசான் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியான அமித் அகர்வால் தெரிவித்து உள்ளார்.
உள்ளூர் தொழிலினை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விற்பனையில், பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதில், புதிதாகத் தொழில் துவங்கியவர்களில், 6.7% பேர் நல்ல வளர்ச்சியினை அடைந்துள்ளனர். இதில் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் விற்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.