அமேசான், பிளிப்கார்ட்டிக்குப் போட்டியாக வரும் ஜியோமார்ட்!

04 May 2020 தொழில்நுட்பம்
jiomart.jpg

தற்பொழுது ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதும், விற்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தியாவில் மொத்தம் 135 கோடி மக்கள் இருக்கின்றனர்.

அவர்களில் 80% பேர், இணையத்தினைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் அமேசான், இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டன. பிளிப்கார்ட் நிறுவனத்தினை, ஜெப் பிஸோஸ் மற்றும் வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும், அதிபர்களும் கைப்பற்றினர். தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்க நிறுவனங்களே ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வருகின்றன.

இவைகளுக்கு போட்டியாக, தற்பொழுது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமானது, ஜியோ மார்ட் என்ற புதிய நிறுவனத்தினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், இந்தியர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை, இந்த இணையதளத்தின் மூலம் விற்க முடியும் என்றுக் கூறியுள்ளது. இதில் இப்பொழுதே வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய விருப்பம் காட்டி வருகின்றன.

அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் தற்பொழுதே மிகவும் தீவிரமாக இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளன. இது அமெரிக்க நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்டவைகளுக்கு, கடும் தலைவலியாக மாறியுள்ளது. ஜியோமார்ட் ஆரம்பிக்கப்பட்டுவிட்டால், கண்டிப்பாக இந்தியர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை இதில் விற்க ஆரம்பித்து விடுவர்.

ஜியோ நெட்வொர்க் ஆரம்பித்து, மூன்று வருடமே ஆக உள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம்.

HOT NEWS