அம்பன் புயல்! தீவிரமாக கண்காணிக்கும் மத்திய அரசு!

19 May 2020 அரசியல்
ambanstorm.jpg

இந்தியாவின் வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள அம்பன் புயலினை, மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது.

கடந்த 15ம் தேதி அன்று, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருந்து வந்த காற்றானது, வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறியது. இது மேலும் வழுவடைந்து, விசாகப்பட்டினம் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன என வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இந்த அம்பன் புயலால் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

இந்தப் புயலின் தொடக்கத்தில் இருந்தே, இதன் நிலைமைக் குறித்து மாநில அரசுகளுக்குத் தெரிவித்து வருகின்றது மத்திய அரசு. மேலும், இந்தப் புயல் காரணமாக, வெப்பக் காற்று வீசும் எனவும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

HOT NEWS