சவுதிக்கு 200 படைகளை பாதுகாப்பிற்காக அமெரிக்கா அனுப்புகிறது!

27 September 2019 அரசியல்
military.jpg

சவுதி அரேபியாவில் உள்ள, ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான, எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலையில், ஈரான் தொடர்புடைய அமைப்புகள் தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக, கச்சா எண்ணெயின் விலைக் கடுமையாக உயர்ந்தது. எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சவுதிக்கு கூடுதலாக, 200 இராணுவப் படைகளை அனுப்புகின்றது அமெரிக்கா.

பாதுகாப்பு மற்றும் வியாபாரம் இவற்றைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவிற்கு அமெரிக்க தன்னுடைய இராணுவத்தின், சுமார் 200 படைப் பிரிவுகளையும், வான்வெளித் தாக்குதலைச் சமாளிக்கும் ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வழங்கியுள்ளது. மேலும், எதிரிகளின் ஊடுறுவலைக் கண்காணிக்கும் அதிநவீன ரேடார் தொழில்நுட்பம் கொண்ட கருவிகளையும் வழங்கியுள்ளது.

HOT NEWS