ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தற்பொழுது சுமூகமான உறவுநிலை இல்லை. இந்நிலையில், அமெரிக்கா கடற்படை அரபிக்கடலில், தன்னுடைய போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், போர் செய்வது போன்ற ஒரு வீடியோவையும் தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், விமானம் தாங்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து இரண்டு நாட்களாக, அரபிக்கடலில் போர் பயிற்ச்சியில் அமெரிக்க ஈடுபட்டு வருவது, உலக நாடுகள் மத்தியில், கவலையை ஏற்படுத்தியுள்ளது.