அமெரிக்கா நாசியினை விட மோசமானது! முன்னாள் வீரர் பரபரப்பு பேட்டி!

11 April 2020 கதைகள்
naziusa.jpg

அமெரிக்கா அரசாங்கமும், அவர்களின் படையும், ஹிட்லரின் நாசிப் படையினை விட மிக மோசமானது என, முன்னாள் அமெரிக்க டிரோன் ஆப்பரேட்டர் அதிரடி கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

டெய்லி மெய்ல் என்ற செய்தி நிறுவனத்திற்கு, பிரத்யேக பேட்டியளித்த அமெரிக்காவின் முன்னாள் டிரோன் ஆப்பரேட்டரான ஸ்டாப் சார்ஜென்ட் பிராண்டன் பிரயன்ட், இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசுகையில், ஈராக், நியூ மெக்சிகோ, நிவேடா உள்ளிட்ட அமெரிக்க நிலைகளுக்கு சாதமாக யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என முடிவெடுப்பது தான், என்னுடைய வேலை. அமெரிக்காவின் பிரிடேட்டர் ட்ரோன்ஸ்களை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இயக்குவது தான் தன்னுடைய வேலை எனவும், கோ-பைலெட்டாக பணிபுரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னுடைய 19வது வயதில், அமெரிக்க விமானப் படையில் அவர் சேர்ந்துள்ளார். 2006 முதல் 2011 வரை சுமார், 1626 இலக்குகளை அவர் தாக்கியதாகவும், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர் எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்நாளில், 16 பேரினைத் தாக்கி அழித்துள்ளதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்தார். தன்னுடைய முதல் தாக்குதலின் பொழுது, ஸ்ப்ளாஸ் எனக் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

அவர் பேசுகையில், நான் பணிபுரிந்த காலக் கட்டத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்கவானது, ஹிட்லரின் நாசிப் படையினை விட மிக மோசமான ஒன்றாகும். அவர்களை விட, இவர்களே மிகக் கொடுமைக்காரர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS