மலைவாழ் மக்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை! அமித் ஷா கடும் தாக்கு!

17 November 2019 அரசியல்
amitshahspeech.jpg

மலைவாழ் மக்களுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற, ஆதி மஹோத்சவ் என்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கானத் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமித் ஷா. அப்பொழுது, பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

அப்பொழுது பேசி அவர், இதுவரை மலைவாழ் மக்களை ஓட்டுக்காக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தி வந்துள்ளது. கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில், இந்தியாவில் பழங்குடியினருக்காக எவ்வித திட்டத்தினையும் செயல்படுத்தியதில்லை. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பழங்குடியினரின் வளர்சிக்காக, பல்வேறுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

வாஜ்பாயின் ஆட்சியில், பழங்குடியினருக்குப் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்பொழுது, மோடியின் ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இலவச வீடுகள், இலவச கேஸ் இணைப்பு, மின் இணைப்புகள் உட்பட பல வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.

பிர்ஷா முண்டாவினை நம் நாடு என்றும் மறக்காது. அவருடைய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டமும் சரி, அவர் பழங்குடியினருக்கு செய்ததும் சரி, மிகவும் பாராட்டுதலுக்குரியவை என்று கூறியுள்ளார்.

HOT NEWS