அமித் ஷா தற்பொழுது மூச்சுத் திணறல் காரணமாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அமித் ஷா, கடந்த 2ம் தேதி அன்று, கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் காணப்பட்டார். அவருடைய உடலில் லேசான அறிகுறிகள் இருந்ததால், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் பணியாற்றிய மற்றும் தொடர்பில் இருந்தவர்களும், தனிமைப்படுத்தப்பட்டனர்.
அமித்ஷா தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில், அவர் உடல்நலம் சரியானதாக நேற்று வீடு திரும்பினார். இந்த சூழ்நிலையில், இன்று அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், அவர் இன்று அவசர அவசரமாக, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர்.
தற்பொழுது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா, அங்கிருந்து கொண்டே, தன்னுடைய பணிகளை கவனிப்பார் எனக் கூறப்படுகின்றது.