இந்தியாவிற்கு எதிராக குரல் எழுப்புவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர்-அமித் ஷா காட்டம்!

14 January 2020 அரசியல்
amitshahspeechcaa.jpg

மத்திய அரசு சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி சட்டத்தினை நிறைவேற்றியதில் இருந்து, நாடு முழுவதும் கடும் போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சட்டமானது, வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி போபாலில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, இந்தியாவில் வான்முட்டும் அளவில் ஸ்ரீராமருக்கு திருக்கோயில் கட்டப்படும் எனக் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், இந்தியாவில் உள்ள யாருக்கும் தற்பொழுது நிறைவேற்றபட்டுள்ள சட்டத்தால், பாதிப்பு ஏற்படாது. ஆனால், எதிர்கட்சிகள் வேண்டும் என்றே, வன்முறையைத் தூண்டிவிடுகின்றன. போராட்டத்தினைத் தூண்டிவிட்டு கலவரங்களை உண்டாக்குகின்றன.

மாணவர்கள் போராட்டத்தின் பொழுது, இந்தியாவிற்கு எதிரான கோஷங்களும் முழக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும், அவர்கள் சிறையில் உள்ள கம்பிகளுக்குப் பின்னால் நிற்க வேண்டி இருக்கும்.

நான், எதிர்கட்சியின் ராகுல்காந்தி மற்றும் கபில் சிபில் ஆகியோரைப் பார்த்துக் கேட்கின்றேன். இந்த சிஏஏ சட்டத்தில் உள்ள பிழைகளைக் காட்டுகள் பார்ப்போம், எனக் கூறினார். கபில் சிபில் கூறுகையில், ராமர் கோயில் கட்டப்படுவது கேள்விக் குறி தான் எனக் கூறியுள்ளார். நான் கூறுகின்றேன். இன்னும் நான்கு மாதத்தில், விண்ணுயற கோயில் கட்டப்படும்.

சுதந்திரக் காலக் கட்டத்தில், மதத்தின் அடிப்படையில் தான் காங்கிரஸ் பிரித்தது. இந்து, முஸ்லீம், பார்சிகள், சீக்கியர்கள் மற்றும் ஜெய்ன்கள் என மதத்தினை அடிப்படையாக வைத்துப் பிரித்தது. மேற்கு பாகிஸ்தானில் அந்தக் காலக் கட்டத்தில் சுமார், 30% இந்துக்கள் இருந்தனர். ஆனால், தற்பொழுது வெறும் 3% இந்துக்களே உள்ளனர். அங்குள்ள பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். மேலும், கிழக்கு வங்கதேசத்தில் 7% இந்துக்களே உள்ளன.

நான் காது கேட்காத, கண் தெரியாத காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்துக் கேட்கின்றேன். எங்கே அந்த சீக்கியர்கள், இந்துக்கள், ஜெய்ன்கள்? எங்கே வங்கத்தில் இருந்த மச்சுவா மக்கள்? எனக் காட்டமாக பேசினார்.

HOT NEWS