தமிழகத்திற்கு அடுத்த வரும், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவர்களுள் ஒருவருமான, அமித் ஷா வருகை தர உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. இதற்கானப் பணிகளில், தமிழகத் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. அதே போல், அனைத்து தமிழகக் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையினை தயார் செய்யும் வேலையில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதிமுகவும் தற்பொழுது தேர்தலுக்காக ஆயத்தம் ஆகி வருகின்றது.
இந்த சூழலில், பாஜக தற்பொழுது தேர்தலை எதிர் கொள்ள ஆயத்தமாகி வருகின்றது. இதற்காகப் பல்வேறு யூகங்களையும் அது தீட்டி வருகின்றது. இந்த நிலையில், வருகின்ற 21ம் தேதி அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகின்றார். மத்திய அரசின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார் எனக் கூறினாலும், உண்மையில் அவர் பாஜகவினரைச் சந்திக்கவே வருகின்றார் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.