ஒரே ட்வீட்டில் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த அமித் ஷா!

14 September 2019 அரசியல்
amithshahlatest.jpg

இந்தி தினமான இன்று அமித் ஷா, அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கு அடையாளமாக, இந்தி மொழி இருக்க வேண்டும் என அவர் செய்துள்ள டீவீட் தற்பொழுது கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றாக, ஹிந்தி மொழி உள்ளது. மேலும், அரசவை மொழியாகவும் தற்பொழுது உள்ளது. இந்நிலையில், ஹிந்தி தின நாளைக் கொண்டாடும் விதத்தில் டிவீட் செய்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா. அதில், இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு, இருப்பினும், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருக்க வேண்டும் எனவும், அப்பொழுது தான் நம்முடைய நாட்டை ஒற்றுமையுடன் வைத்திருக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு திமுக உட்பட பல கட்சிகள் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடி இதுகுறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும், இல்லையெனில் திமுக இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும் குடிமை, ரயில்வே, அஞ்சல் ஒவ்வொன்றிலும் இந்தியை திணிக்க பாஜக முயல்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க திமுக தயாராக உள்ளது. இது இந்தியா. ”இந்தி”யா அல்ல எனக் கூறியுள்ளார். மேலும், இல்லையெனில், தமிழகத்தில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க தி.மு.கழகம் தயங்காது என்றும் கூறியுள்ளார்.

நாங்கள் ஹிந்தியை எதிர்க்கவில்லை. ஹிந்தித் திணிப்பை எதிர்க்கின்றோம் என, திமுக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

HOT NEWS