ஐ எம் ஆல் ரைட்! அமித் ஷா விளக்கம்!

10 May 2020 அரசியல்
amitshahoffice.jpg

தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உடல்நலம் இல்லை எனத் தகவல்கள் பரவின. இது செய்திகளிலும் வெளியானது. இதற்கு தற்பொழுது மறுப்புத் தெரிவித்து, அமித்ஷா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், தான் பூரண முழு உடல்நலத்துடன் இருப்பதாகவும், சில தினங்களாக சமூக வலைதளங்களில் தன்னுடைய உடல்நலம் குறித்துத் தவறான வதந்திகள் பரவியதாகவும், கடுமையான பணிகளுக்கு இடையில் அதனைக் கவனிக்கவில்லை எனவும், எனினும் ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் கவலைப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்காக இந்த அறிக்கை வெளியிடுகின்றேன் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடி வருவதாகவும், அதனால், தாம் இந்த வதந்திகளைக் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், அவருடையத் தீவிர ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS