ஜூன் 1 முதல் மேட் இந்தியா பொருட்களே விற்கப்படும்! அமித்ஷா அறிவிப்பு!

14 May 2020 அரசியல்
amitshahspeech12.jpg

மே-12ம் தேதி அன்று இரவு எட்டு மணிக்கு, நாட்டு மக்களின் முன்னிலையில் சுமார் 34 நிமிடங்கள் பேசினார். அப்பொழுது, இந்த 21ம் நூற்றாண்டின் வல்லராக இந்தியா மாறுவதற்கு, நாம் சுயசார்பு பொருளாதாரத்தினை பின்பற்ற வேண்டும் என்றுக் கூறினார்.

இதனடிப்படையில், இந்தியாவின் பல அமைப்புகள் தற்பொழுது இந்தியப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன் வந்துள்ளன. இந்தியாவின் சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் எனப்படும், பாராமிலிட்டரியானது அதிரடி முடிவினை எடுத்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

அவர் கூறுகையில், நேற்று பாரதப் பிரதமர் மோடி பேசுகையில் தற்சார்பு பொருளாதாரம் பற்றி அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில், இனி பாராமிலிட்டரி கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்கள் அனைத்துமே, இந்தியப் பொருட்களாகவே இருக்கும் என்றுக் கூறியுள்ளார். இது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் பாராமிலிட்டரியில், மொத்தம் 10 லட்சம் பேர் தற்பொஉது பணியாற்றுகின்றனர். மேலும், அதன் கேன்டீன்களின் மூலம் மொத்தம் 50 லட்சம் பேர் இந்தியப் பொருட்களைப் பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம், இந்தியப் பொருட்களின் விற்பனை உயர ஆரம்பிக்கும் என்றுத் தெரிவித்தார். பாராமிலிட்டரி கேன்டீன்கள் மூலம், ஆண்டுக்கள் 2800 கோடி அளவிற்கு, விற்பனைகள் நடைபெறுகின்றன.

இந்தியாவின் பாராமிலிட்டரி தான், இந்தியாவில் முதன் முதலாக சுதேசப் பொருட்களைப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ள அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS