சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக 53 லட்சம் போன் கால் வந்துள்ளது! அமித் ஷா பெருமிதம்!

07 January 2020 அரசியல்
amitshahrally.jpg

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் 8866288662 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து ஆதரவளிக்கும் திட்டத்தினை அறிவித்தார் அமித் ஷா. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்குள் 53 லட்சம் மிஸ்டு கால்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்களும், கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிஏஏ சட்டம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க, மகளை சந்திக்கும் பேரணியினை பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆரம்பித்து வைத்தார்.

மேலும், மிஸ்டு கால் மூலம் ஆதரவளிக்கும் திட்டத்தினையும் அவர் துவக்கி வைத்தார். இந்நிலையில், நேற்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளிக்கையில், கடந்த மூன்று நாட்களில், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுமார் 52.73 லட்சம் பேர் மிஸ்டு கால் அளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டமானது, பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறினார்.

Source: timesofindia.indiatimes.com/india/caa-campaign-got-over-53-lakh-calls-of-support-amit-shah/articleshow/73130449.cms?utm_source=twitter.com&utm_medium=social&utm_campaign=TOIDesktop

HOT NEWS