அமிதாப் பச்சனுக்கு சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும், மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என, மத்திய அரசு அறவித்துள்ளது.
அமிதாப் பச்சனை, தெரியாத இந்தியர்களேக் கிடையாது எனலாம். அந்தளவிற்கு மனிதர் பிரபலமானவர். பாலிவுட் நடிகரான இவருடையப் படங்கள், இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் சக்கைப் போடு போட்டவை. இவருடைய வெற்றிப் படங்களை, தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் ரீமேக் செய்து நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, சினிமாத் துறையில் அரசனாக வலம் வரும், அமிதாப் பச்சனை கௌரவிக்கும் வகையில், அவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருதினை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது. இதற்கு அமிதாப்பின் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான திரு.முக ஸ்டாலினும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தங்களுடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.