இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து டிவீட் செய்துள்ள அபிஷேக் பச்சன், இன்று நடத்தப்பட்ட சோதனையில், எனக்கும், என் தந்தைக்கும் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் லேசாக இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் தகவல் கொடுத்துள்ளோம். எங்கள் குடும்பத்தாரிடமும் கொரோனா சோதனை நடைபெற்றுள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்புடனும், அச்சமில்லாமலும் இருக்க வேண்டுகின்றோம் நன்றி எனக் கூறியுள்ளார். இந்த பாதிப்பினைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
விரைவில் அமிதாப் பச்சன் மற்றும் அபிசேக் பச்சன் ஆகியோர் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.