வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை! வீடு திரும்பினார் அமித் ஷா!

06 September 2019 அரசியல்
amithshah12.jpg

அமித் ஷாவிற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்பொழுது அவர் ஓய்வில் உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் திரு அமித் ஷா. பாஜகவின் மிக முக்கியமானத் தலைவர்களுள் ஒருவராக இருக்கும் இவர், பாஜக வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார். இவருக்கு கழுத்தின் பின் பகுதியில் இருந்த கட்டியை நீக்க, அமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை, குஜராத்தில் உள்ள அமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்த அவர், மருத்துவர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், அவருடைய கழுத்தில் இருந்த லிபோமா எனும் கட்டி, அறுவை சிகிச்சைக்குப் பின், வெற்றிக்கரமாக நீக்கப்பட்டது. பின்னர், ஒரு நாள் ஓய்வில் இருந்த அவர், குஜராத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு ஓய்விற்காக சென்றுவிட்டார்.

ஓய்வு முடிந்ததும், மீண்டும் டெல்லியில் உள்ள அவர் வீட்டிற்கு, வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HOT NEWS