மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் பரவி இருகின்ற கொரோனா வைரஸானது, தற்பொழுது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், தற்பொழுது பெரும் தலைவர்களும், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்ற வாரம், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சில அறிகுறிகள் தென்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தாமாகச் சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டேன். அதில், எனக்குத் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து, நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். என்னுடன், தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் ஆளுநர் மாளிகையில் வேலை செய்தவர்களிடம் கொரோனா தொற்று இருப்பது உறுதியானைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்திடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தற்பொழுது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.