இஸ்லாமிய நண்பன் மடியில் இந்து நண்பன்! நெகிழ வைத்த சம்பவம்!

24 May 2020 அரசியல்
amrityaqoob.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், மே-31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், பல லட்சம் புலம்பெயரும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக, பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் இருந்து, பீகாரின் பான்பட்டி நகருக்கு பலரும் புலம்பெயர முயற்சித்து உள்ளனர். 5000 ரூபாயினைக் கொடுத்து ஒரு லாரியில் நின்றபடியே, அவர்கள் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். சுமார், 2,254 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட இந்தப் பயணத்தினை நின்று கொண்டே செய்துள்ளனர்.

கடுமையான வெயில் வேறு வாட்டியெடுக்கின்ற சமயத்தில், அதிகநபர்கள் இருந்ததால், அந்த லாரியில் யாராலும் மூச்சுக் கூட விட முடியவில்லை. இந்த சூழலில், அந்த லாரியில் பயணம் செய்த 24 வயது இளைஞரான அம்ரித், 23 வயது இளையஞரான யாகூப்பும் அந்த லாரியில் இருந்து இறங்கி உள்ளனர். அந்த லாரியில் பயணிக்கும் பொழுது, அம்ரித்திற்கு உடல்நலம் சரியில்லாமல் போய் உள்ளது.

அதனால் வேறு வழியின்றி, பயணத்தின் பொழுது பாதியிலேயே இறங்கியுள்ளனர். அப்பொழுது, அம்ரித்தால் பேசக் கூட இயலவில்லை. அதனால், அவனுடையத் தலையை தன்னுடைய மடியில் வைத்து அவனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார் யாகூப். அப்பொழுது எதேச்சையாக, ஒரு ஆம்புலன்ஸ் அப்பகுதியில் வந்துள்ளது. அந்த ஆம்புலன்சில் அந்த இருவரும் சென்றுள்ளனர்.

அம்ரித் அந்த மருத்துவமனையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாகூப்பிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற சோதனை செய்யப்பட்டது. இது குறித்துப் பேசிய யாகூப், உடனிருக்கும் நண்பன் கஷ்டப்படும் பொழுது, அவனை எவ்வாறு விட்டுவிட முடியும். அதனால் தான், நான் அவனுடன் இறங்கினேன் எனக் கூறியுள்ளார்.

தற்பொழுது நாடு முழுக்க, இஸ்லாமியர் இந்து என்றப் பிரச்சனை நிலவி வருகின்ற சமயத்தில், இது போன்ற நெகிழ்ச்சிகரமான சம்பவமே, இந்தியாவின் ஒற்றுமை குறித்த உண்மையான முகமாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS