பாரம்பரிய மருத்துவத்தினை ஏன் பரிசீலிக்கக் கூடாது? அன்புமணி ஆலோசனை!

03 April 2020 அரசியல்
coronaanbumani.jpg

பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தற்பொழுது மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கோவிட்-19 வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. அடுத்து என்ன அறிவிப்பு அரசாங்கத்திடம் இருந்து வெளிவரும் என, பொதுமக்கள் பீதியிலேயே உள்ளனர். இந்நிலையில், இதற்கு தற்பொழுது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், நோயாளிகளுக்கு பலவிதமான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, சித்த மருத்துவர் தணிகாச்சலம் தன்னிடம் மருந்து இருப்பதாகவும், தாமே முன் வந்து இலவசமாகத் தர தயார் எனவும் கூறினார். ஆனால், அவருடையப் பேச்சினை யாரும் கேட்பதாக இல்லை. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

கொரோனாவுக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும். நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HOT NEWS