சம்பளம் வழங்குங்கள்! தொழிலாளர்கள் போராட்டம்!

07 May 2020 அரசியல்
ltprotest.jpg Pic Credit:-twitter.com/aryansrivastav_/status/1256113128695365632

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் ஆலையில் வேலை செய்தவர்கள், தங்களுடைய ஏப்ரல் மாத சம்பளத்தினை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. வருகின்ற மே-17ம் தேதி வரை இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டும் உள்ளது. இதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் வேலைக்குச் சென்றவர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப இயலாமல், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்&டி நிறுவனத்திற்கு சொந்தமான, ஹெச்பிசிஎல் சுத்திரகரிப்பு ஆலையில் வேலைப் பார்த்து வந்த, வெளிமாநில பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், நாங்கள் எங்களுடைய ஏப்ரல் மாத ஊதியத்தினைத் தான் கேட்கின்றோம். எங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல இயலாமல், கஷ்டப்படுகின்றோம்.

எங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என, எல்&டி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தோம். அந்த நிறுவனத்தின் சார்பில், ஒரே ஒரு அதிகாரி மட்டும் வந்து எங்களைச் சந்தித்தார். அவ்வளவு தான். வேறு யாரும் வரவில்லை. முதலில் உணவினை வழங்கி வந்தனர். தற்பொழுது, உணவும் கூட தருவது கிடையாது எனப் போராடி வருகின்றனர்.

Recommended Articles

HOT NEWS