உங்களுடைய ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தினைக் கற்றுக் கொடுங்கள் என, நடிகை ஆன்ட்ரியா கருத்துத் தெரிவித்து உள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், 19 வயதுடைய பெண் ஒருவர் நான்கு நபர்களால், கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில், பலரும் குறிப்பாக பாஜக பிரமுகர் ஒருவரும், பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றுக் கூறி வந்தனர். இது குறித்து, நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியா தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், தன்னுடையக் கருத்தினைத் தெரிவித்து உள்ளார்.
அவருடையப் பதிவில், பொறுப்புணர்வு இல்லாவிட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது. அவர் தாக்கப்பட்டார், துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது பெண்ணின் தவறு அல்ல! இந்தியத் தாய்மார்களே, உங்கள் மகன்களுக்கு கல்வி கற்பித்தல்! பெண்களை மரியாதையுடன் நடத்த அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்! என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.