ஒரு வருட தயாரிப்பு மற்றும் பல மாத சோதனைகளுக்குப் பிறகு, ஆன்ட்ராய்டு 10 வெளியாகி உள்ளது. இந்த முறை உண்மையிலேயே பல புதிய வசதிகளை, பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில், கொடுத்துள்ளது ஆன்ட்ராய்டு.
எப்பொழுதும் ஆன்ட்ராய்டு அப்டேட்டுகள், உணவுப் பொருளின் பெயரிலேயே வெளிவரும். இந்நிலையில், தற்பொழுது ஆன்ட்ராய்டு க்யூ என வரவிருந்த நிலையில், ஆன்ட்ராய்டு 10 என்றே அதனை வெளியிட்டுள்ளனர். இந்த அப்டேட் இன்று பிக்சல் மொபைல்கள் முதல் அனைத்து மொபைல்களுக்கும், அப்டேட்டாக வரவிருக்கின்றது என தொழில்நுட்ப வள்ளுநர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன எனப் பார்ப்போம்.
இந்த வசதி சாம்சங் போன்களில் மட்டுமே, இருந்து வந்தது. தற்பொழுது இந்த அப்டேட் மூலம், அனைத்து மொபைல்களுக்கும் வழங்க உள்ளது ஆன்ட்ராய்டு. இதனைப் பயன்படுத்தி, எளிமையாக நம்மால், கணிணியில் செய்யும் வேலைகளைச் செய்ய இயலும்.
இந்த வசதிக்கு, எவ்வித இணைய வசதியும் தேவையில்லை. நீங்கள் பேசும் பொழுது, வீடியோ பார்க்கும் பொழுது, வீடியோ எடுக்கும் பொழுது, யூடியூப்பில் வீடியோ பார்க்கும் பொழுது அதனை நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, எளிமையாக ரெக்கார்ட் செய்ய இயலும்.
இதற்கு முன், ரிப்ளை என்ற வசதியினை கூகுளின் ஆன்ட்ராய்டு நிறுவனம் வழங்கியது. தற்பொழுது, ஸ்மார்ட்டர் ரிப்ளை வசதியாக அதனை மேம்படுத்தி உள்ளது. இதன் மூலம், உங்களுக்கு வரும் மேசேஜ்களை எவ்வித கஷ்டமும் இன்றி, பார்க்க இயலும். உங்களுடன் ஒருவர் முகவரியை ஷேர் செய்தால், அதனை கூகுள் மேப் மூலம், எளிதாகப் பார்க்க இயலும். மேலும், பல சிறப்புகளுடன், இந்த ஸ்மார்ட்டர் ரிப்ளை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியினை, மீண்டும் கொண்டு வந்துள்ளது ஆன்ட்ராய்டு. இதன் மூலம், பேட்டரி சேவர் மோடிற்கு செல்லும் பொழுது, தானாக, டிஸ்ப்ளே பிரைட்னஸ் குறைந்துவிடும். இதன் மூலம், பேட்டரியினை நீண்ட நேரம் பாதுகாக்க முடியும்.
அனைத்து ஆன்ட்ராய்டு போன்களிலும், கீழே மெனு பட்டன், பேக் பட்டன் மற்றும் ஸ்கிரீன் பட்டன் இருக்கும். இந்த அப்டேட்டில் இருந்து அந்த பட்டன்கள் இருக்காது. மாறாக, கீழே ஒரு மெல்லியி வெண்மை நிற கோடு இருக்கும். அதனை மேலே இழுத்துவிட்டால், அதில் அனைத்தும் இருக்கும். இதனை நீங்கள் ஐபோன்களில் காண இயலும்.
பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட விஷயங்களை காக்கும் பொருட்டு, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்த ஆப் உங்களுடைய லோகேஷனைப் பயன்படுத்தினாலும், அதனை முன்கூட்டியே உங்களுக்கு தெரிவித்துவிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது
இது ஆண்ட்ராய்டு ஆப்களை அப்டேட் செய்வதற்காகவும், மற்ற வசதிகளுக்காவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய அப்டேட் செய்யும் விதத்தைக் காட்டிலும், மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பற்றி நாம் நன்கு அறிவோம். பொதுவாக, மற்ற ஆன்ட்ராய்டு ஆப்களைப் பயன்படுத்தி, போனில் செய்யும் செயல்களை ரெக்கார்டு செய்வோம். ஆனால், தற்பொழுது கூகுள் நிறுவனமே, தன்னுடைய ஆண்ட்ராய்டு 10ல் அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம், நம்மால் எளிதாக, மொபைலில் விளையாடும் கேம்கள், பாடல்கள், வீடியோக்கள் உட்பட அனைத்தையும், விரல் நுனியில் ரெக்கார்ட் செய்ய இயலும்.
இம்முறை மிகவும் கவனமாக, இந்த அப்டேட்டை உருவாக்கியுள்ளது ஆன்ட்ராய்டு நிறுவனம். இதன் மூலம், நீங்கள் விரும்பிய நிறத்தில், விரும்பிய தீமினை எளிதாகவும், எவ்வித சிரமமுமின்றியும் சிறப்பாக பயன்படுத்த இயலும்.
பொதுவாக போல்டபுள் மொபைல்கள் எனப்படும், தேவைக்கேற்ப மடக்கிப் பயன்படுத்தும் மொபைல்களில், அதன் டிஸ்பிளேவிற்கு ஏற்ப, ஆன்ட்ராய்டு ஆப்களும் தன்னை மாற்றிக் கொள்ளும் வசதியினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், வரும் காலத்தில் அதிக அளவில் போல்டபுள் மொபைல்கள் வந்தால், அதில் பயன்படுத்த வேண்டிய ஆப்களை எவ்வித சிரமமுமின்றி எளிதாகப் பயன்படுத்த இயலும்.