தமிழகத்தில் 200 மில்லியன் யூரோ! ஜெர்மனி பிரதமர் அறிவிப்பு!

03 November 2019 அரசியல்
angelamerkel.jpg

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மைக்கேல், தமிழகத்தில் சுமார் 200 மில்லியன் யூரோ பணத்தினை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு, இரண்டு நாள் சுற்றுப் பயணம் வந்துள்ளார் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மைக்கேல். அவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பொழுது, எலக்ட்ரிக் வாகனங்களை ஏன் உபயோகிக்க வேண்டும் என்பதற்கு, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடே உதாரணம். இது ஒன்றே, டீசல் வாகனத்தில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான காரணம் என்றும் கூறினார்.

இந்தியாவில், சுமார் 8000 கோடி ரூபாயினை ஜெர்மனி-இந்தியா உறவிற்காக, செலவழிக்க இருப்பதாகவும் அவர் விவரித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சுமார் 200 மில்லியன் யூரோ அளவிற்கு, பேருந்து போக்குவரத்தில் முதலீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

இன்று தன்னுடையப் பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்புகின்றார் ஏஞ்சலா. அதே சமயம், தாய்லாந்து நாட்டிற்காக, அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார் பாரதப் பிரதமர் மோடி.

HOT NEWS