பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி!

17 November 2019 அரசியல்
anilambani.jpg

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனராக இருந்து வந்த அனில் அம்பானி, தற்பொழுது தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம், மாபெரும் நஷ்டத்தினை சந்தித்து வருகின்றது. இதனால், உடனடியாக வாங்கியக் கடனை கட்ட வேண்டும் என நீதிமன்றமும், கடன் கொடுத்த வங்கிகளும் நெருக்கடி கொடுத்து வந்தன. இதனால், தங்களுக்குச் சொந்தமாக இருந்த சொத்துக்களை விற்று கடன்களை அடைந்து வந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்நிலையில், தொடர்ந்து ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட இயலாமல் திணறி வந்தது ரிலையன்ஸ். மொத்தமாக 23,327 கோடி ரூபாய் அளவிற்கு கடன் ஏற்பட்டு இருந்துள்ளது. மேலும், தங்களுடைய சொத்துக்களை விற்க ரிலையன்ஸ் தயாராக இருந்தாலும், யாரும் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, வங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனையடுத்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி, சாயா விரானி, மஞ்சரி கக்கர் உட்பட நான்கு பேர், நவம்பர் 15ம் தேதி அன்று தங்கள் பதவியினை ராஜினாமா செய்துள்ளனர். அனில் அம்பானி, உலக டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS